தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 6 மற்றும் 9ம் ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தேர்தலின் போது வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தை தேர்தல் விதிமுறைகள், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நாளில் இருந்து அமலுக்கு வருவதாக மாநில தேர்தல் மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் செயல்பட்டு வருகின்றனர்.தேர்தல் விதிமுறைகளை குறித்து அதிகாரிகள் அளிக்கப்பட்ட பயிற்சிக்கு எந்த ஒரு பயனும் இல்லை.இங்கு பல ஊராட்சி ஒன்றியங்களில் திமுக, அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகளின் கொடிகள் தேசிய நெடுஞ்சாலையில் 100 அடி வான் உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது. இதனை போலவே பல விதி மீறல்கள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் தேர்தல் அலுவலர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றசாட்டு கூறியுள்ளனர்.