Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் விதிமுறை அமலில் இருக்கு… துப்பாக்கி வச்சிருந்தா ஒப்படச்சிருங்க… காவல்துறை அதிரடி அறிவிப்பு..!!

சிவகங்கையில் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்களில் 228 பேர் தங்களது துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. அதன்படி துப்பாக்கி வைத்திருப்பவர்கள் காவல் நிலையங்களில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், மானாமதுரை, காரைக்குடி, சிவகங்கை ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவட்டம் முழுவதிலும் மொத்தம் 304 பேருக்கு துப்பாக்கிகள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதில் வங்கி ஏ.டி.எம்.களுக்கு பணம் கொண்டு செல்லும் பணியில் 76 பேர் உள்ளனர். அந்த 76 பேரை தவிர அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்களில் மற்றவர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள காவல்நிலையத்தில் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து 76 பேரை தவிர மீதமுள்ள 228 பேர் காவல் நிலையங்களில் தங்கள் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |