Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி… மாற்றுதிறனாளிகளுடன் உறுதிமொழி கையொப்பம் … மாவட்ட ஆட்சியர் தலைமை..!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்று மாற்றுத்திறனாளிகள் உடன் இணைந்து கையொப்பமிட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் முன்னேற்பாடுகளை செய்யுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பல்வேறு இடங்களில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வாக்காளர் விழிப்புணர்வு, உறுதிமொழி கையொப்பம், உறுதிமொழி ஏற்றல் ஆகிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இளையான்குடி பகுதியில் நடைபெற்றது. இளையான்குடி பகுதியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, ஜனநாயக முறைப்படி தலைவரை தயக்கமின்றி வாக்களித்து தேர்வு செய்வது நமது கடமை என்று கூறியுள்ளார். இதையடுத்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் வரைந்திருந்த கோலத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் ஜபருல்லா கான், கல்லூரி தலைவர் முகமது சுபைர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி என பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து உலக மகளிர் தினத்தன்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்ட கோலத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கியுள்ளார். மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வுடன் தவறாமல் வாக்களிப்போம் என்று இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தாசில்தார்கள் ராஜா, ஆனந்த், தொழில் வேளாண்மை அலுவலர் கணேசன், வருவாய் துறை அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |