நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்த மன்சூர் அலிகான் அதில் இருந்து விலகி புதிதாக தமிழ் தேசிய புலிகள் கட்சியை தொடங்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், எனக்கு இரண்டு மாதமாக தொகுதி ஒதுக்கவில்லை. அனைவரும் தேர்தல் பிரச்சார பணியை தொடங்கி விட்டார்கள். இதில் நாம் தமிழர் கட்சியோடு ஒரு சின்ன கருத்து வேறுபாடு இருந்து. நாம ஜெயித்து சட்டசபைக்கு போனால் தானே மக்களுக்கு எதாவது செய்ய முடியும். என தமிழ் தேசிய புலிகள் கட்சியை தொடங்கியுள்ளேன்.
மத்திய அரசு ஆக்டோபஸ் மாதிரி எல்லாத்தையும் அடிமைப்படுத்தி கொண்டு வருகிறது. இதற்குமேல் நாம் பொறுத்துக்கொண்டு இருக்க கூடாது என கிளர்ந்தெழுந்து இதை ஆரம்பித்துள்ளேன். இது காலத்தின் கட்டாயம், காலத்தின் தேவை. தமிழ் தேசிய புலிகள் கட்சி ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரு துணையோடு, ஒத்துழைப்போடு தொடங்குகின்றேன்.
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை, மத்திய அரசு மாநில அரசு எந்த பணியாக இருந்தாலும் தமிழர்களுக்கு தான் அனைத்து வேலைகளும் கொடுக்கப்பட வேண்டும். அனைத்து வளங்களும் காப்பாற்றப்பட வேண்டும். இந்த மண்ணை மீட்க வேண்டும். மத்திய அரசின் கொடூரமான சட்டங்களால் மிகவும் தமிழ் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.
நீட், ஹைட்ரோகார்பன், மீத்தேன் பல திட்டங்களால் கார்ப்பரேட் நிறுவனங்கள் வளம் செழிக்கும் பூமியாக நமது தமிழ்நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதை தடுத்து நிறுத்த தமிழ் தேசிய புலிகள் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. 40 வருடங்களாக சென்னையில் இருக்கின்றேன். 92 இல் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தேன். ஒவ்வொரு கட்சியிலும் நானாக சேருவேன், நானா விலகுவேன். பிறகு அதிமுகவில் இணைந்தேன்,2001இல் அம்மாவை அவர்கள் ஆட்சியில் அமர வைக்கும் போது 150க்கும் மேற்பட்ட கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன்.
புதிய தமிழகம் கட்சி சார்பாக நின்றேன். பிறகு நான் நாம் தமிழர் கட்சியில் இருந்தேன். மனநிறைவோடு, எந்த குறையும் கூறாமல் இருந்தேன். செந்தமிழன் சீமான் கொள்கையும், எங்கள் தமிழ் தேசிய புலிகள் கட்சியும் இரட்டை குழல் துப்பாக்கி போன்றதாக இருக்கும். ஒரே கொள்கையோடு இந்த அரசியல் பணியை தொடங்குவோம்.
தமிழக மக்களை திராவிட கட்சிகள் இரட்டிப்பு செய்கின்றது. திமுக மிகவும் மோசமான நிலையில் மக்களை வைத்துள்ளது. அட்டை போன்று ரத்தத்தை இரத்தத்தை உறிஞ்சி மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடி வருகின்றது திமுக. திமுக மக்களுக்கு ஒன்னுமே செய்யாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்கிறார்கள். இந்த தேர்தலில் தமிழ் தேசிய புலிகள் கட்சி 40 இடங்களில் போட்டியிடும். கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தை நடக்கின்றது என மன்சூர் அலிகான் தெரிவித்தார்.