தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடையும் நிலையில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தேர்தலுக்கு எவ்வித தொடர்பும் இல்லாத நபர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்.
தேர்தல் நடக்கும் பகுதிகளில் வருகின்ற 6 ஆம் தேதி வரை டாஸ்மாக் மது கடைகள் மற்றும் பார்களை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையமானது உள்ளாட்சி தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களிலும் 24,417 பதவிகளுக்கு 80,819 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், 9 மாவட்டங்களில் ஏற்கனவே 3,346 வேட்பாளர்கள் போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.