ஜூன் 12-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை ரயில்வே தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்துள்ள தமிழக மாணவர்கள் பலருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் தேர்வுக்காக இன்று புவனேஸ்வரம் – தாம்பரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில், இன்று காலை 10.30க்கு புறப்பட்டு, நாளை காலை 7.15க்கு தாம்பரம் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சியில் இருந்து ஜூன் 16, 17, 18 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருநெல்வேலி- பெங்களூரு இடையே ஜூன் 13ஆம் தேதி இரவு 11 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். தூத்துக்குடி- கர்னூல் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜூன் 13ஆம் தேதி பகல் 12 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.