Categories
மாநில செய்திகள்

தேர்வர்களே ஏமாந்துறாதீங்க!…. TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்கள்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அரசுப்பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து இந்த வருடம் குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட 32-க்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகள் கடந்த மாதத்தில் வெளியானது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது. அதாவது குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 23ஆம் தேதி அன்று வெளியாகி இருப்பதாக சமூக வலைதளங்களில் போலியான தகவல் ஒன்று பரவியுள்ளது.

இதனால் தேர்வர்கள் உண்மை நிலவரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு டிஎன்பிஎஸ்சி செயலர் உமா மகேஸ்வரி விளக்கமளித்துள்ளார். அதாவது செய்திக்குறிப்பில், “சமூக வலைதளங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு குறித்த தவறான அறிக்கை பரவிக்கொண்டிருக்கிறது. விண்ணப்பதாரர்கள் இந்த அறிக்கையை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம். தேர்வாணையத்தின் இணையதளம் மூலமாக மட்டுமே டிஎன்பிஎஸ்சி அறிக்கைகள் அனைத்தும் வெளியாகும். விரைவில் குரூப்-4 தேர்வுக்கான அறிக்கை இணையத்தில் வெளியிடப்பட உள்ளது. எனவே தேர்வர்கள் அதனை பார்த்து அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சுமார் 5,255 காலிப்பணியிடங்கள் குரூப்-4 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |