Categories
மாநில செய்திகள்

தேர்வர்களே!…. டிஎன்பிஎஸ்சி கூட்டுறவு துறையில் காலிப்பணியிடங்கள்…. 2 நாட்கள் மட்டுமே இருக்கு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை போட்டி தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது. எனினும் கொரோனா காலகட்டத்தில் எந்த ஒரு தேர்வு அறிவிப்புகளும் வெளியாகாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் டிஎன்பிஎஸ்சி கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலியாகவுள்ள பணியின் பெயர் உதவி இயக்குனர் கூட்டுறவு தணிக்கை (Assistant Director of Co-operative Audit) ஆகும்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் 01/07/2022 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இதையடுத்து எம்.ஏ(கூட்டுறவு) அல்லது எம்,காம்., எம்.காம் (கூட்டுறவு) மற்றும் கூட்டுறவு பிரிவில் டிப்ளோமா (அல்லது) ஐசிஏஐ படிப்பை முடித்த நபர் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமல்லாமல் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கபடுபவருக்கு மாதம் சம்பளம் ரூபாய் 56,100 முதல் 1,77,500 லட்ச ரூபாய் வரை வழங்கப்படும். தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த பணி இடங்களுக்கு http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். முன்பே நிரந்தரப் பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கான விண்ணப்பம் கட்டணமாக ரூபாய் 150 செலுத்த வேண்டும். இதனிடையில் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM உள்ளிட்ட வகுப்பினருக்கு மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு உண்டு. இந்த பணிக்கான தேர்வு ஏப்ரல் 30ஆம் தேதி, காலை முதல் தாள் மற்றும் மதியம் 2-ம் தாள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 21/02/2022 (நாளை ) ஆகும். மேலும் பணி தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிய அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று பார்க்க வேண்டும்..

Categories

Tech |