Categories
மாநில செய்திகள்

தேர்வர்களே!!… TNPSC குரூப்-2, 2ஏ தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?….. இதோ முழு விபரம்…..!!!!!

தமிழகத்தில் அரசு துறையில் வணிகவரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை உள்ளிட்ட 33 வகை பதவிகளுக்கு நடத்தப்படும் குரூப் 2, 2ஏ தேர்வு தொடர்பான அறிவிப்பு கடந்த மாதம் 23ஆம் தேதி வெளியாகியது. இதில் குரூப்-2 தேர்வின் மூலம் மொத்தம் 5,831 காலிப் பணியிடங்கள் இருப்பதாகவும், அப்பணியிடங்கள் அனைத்தும் தகுதியானவர்களை கொண்டு நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இத்தேர்வை எழுத விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் எதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்த தேர்வுக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது. வரும் 23ஆம் தேதி வரையிலும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேர்வரின் புகைப்படம், கல்வி சான்றிதழ், தேர்வரின் கையொப்பம், தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் ஆகிய ஆவணங்கள் அவசியமாகும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைகள்

# டிஎன்பிஎஸ்சி -ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று, அதில் one time registration என்ற பகுதியை கிளிக் செய்து கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து, 150 ரூபாய் கட்டணம் செலுத்தி user id மற்றும் password set செய்ய வேண்டும்.

# அதன்பின் டிஎன்பிஎஸ்சி முகப்புபக்கத்தில் apply online என்பதில் உங்களின் OTR கணக்கின் ஐடி மற்றும் கடவுச் சொல்லை உள்ளிட வேண்டும்.

# அப்போது  வரும் பக்கத்தில் குரூப்-2, 2ஏ-வை கிளிக் செய்து, அதில் வரும் ஒவ்வொரு படிநிலைகளை கவனமாக நிரப்பவேண்டும்.

# பின் அடுத்த பக்கத்தில் புகைப்படம், போட்டோ ஆகியவைகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். Applicant details. இதில் one time registration-ல் நீங்கள் கொடுத்த விபரங்கள் இருக்கும். அதை சரிபார்த்து விட்டு தனிப்பட்ட விபரங்களுக்கு செல்ல வேண்டும்.

# அவற்றில் special category certificate details, educational details இருக்கும். அதை பூர்த்தி செய்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

# அடுத்த பக்கத்தில் தமிழ் வழியில் படித்த விபரம் பள்ளி, கல்லூரியின் பெயர்கள் சான்றிதழ் பெற்ற தேதி என்று அனைத்தும் கேட்கப்படும். அப்போது தமிழ் வழியில் படித்ததற்கான இட ஒதுக்கீடு ஆகிய விபரங்களை நிரப்ப வேண்டும்.

# கடைசியாக preview பகுதி வரும்போது, அதில் நீங்கள் கொடுத்த முழு விபரங்களையும் சரிபார்த்து Terms and Conditions அனைத்தையும் படித்து விட்டு SAVE கொடுக்கவும்.

# டெபிட் கார்டு/கிரெடிட்கார்டு/ நெட் பேங்கிங் வாயிலாக தேர்வுக்கான விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

# மேற்கண்ட நடைமுறைகளுக்கு பின் எதிர்கால தேவைக்காக பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளலாம்.

Categories

Tech |