Categories
மாநில செய்திகள்

தேர்வர்கள் கவனத்திற்கு…. இதோ மீண்டும் ஒரு வாய்ப்பு…. TNPSC முக்கிய அறிவிப்பு…!!!!

குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களின் விவரங்களைத் தவறாக உள்ளீடு செய்திருந்தால் அதைத் திருத்தம் செய்துகொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” குரூப் 2, குரூப் 2ஏ தேர்விற்கு, இணைய வழியில்‌ விண்ணப்பிக்க 23 கடைசி நாள்‌ ஆகும். அத்தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்களில்‌, பலர்‌ விண்ணப்பத்தை இறுதியாக சமர்ப்பித்த‌ பிறகு, சில தகவல்களைத் தவறாக உள்ளீடு செய்துவிட்டதாகவும்‌, அவற்றைத் திருத்தம்‌ செய்ய அனுமதிக்கக் கோரியும்‌ தேர்வாணையத்தைத் தொலைபேசி மற்றும்‌ மின்னஞ்சல்‌ மூலமாகத் தொடர்புகொண்டு வருகின்றனர்‌.

மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக விண்ணப்பம்‌ நிராகரிக்கப்படுவதன்‌ மூலம்‌ வெற்றியைத்‌ தவறவிடும்‌ தேர்வர்களுக்கு, வாய்ப்பளிக்கும்‌ வகையில்‌ மேற்கூறப்பட்ட பதவிகளுக்கான இணையவழி விண்ணப்பங்களில்‌ திருத்தம்‌ மேற்கொள்ள விரும்புவோர்‌ 14  முதல்  23 ஆம் தேதிக்குள் விண்ணப்பதாரர்களே தனது OTR மூலமாக திருத்தம்‌ மேற்கொள்ள தேர்வாணைய இணையதளத்தில்‌ வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது

Categories

Tech |