அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பணியாளர்களை தேர்வு மூலமாக தேர்வு செய்து காலியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக தேர்வு நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைந்துள்ளதால் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுகளுக்கான தேர்வு தேதி வெளியிடப்பட்டுள்ளது. இளநிலை கல்வெட்டு ஆய்வாளர் பணிக்கான சிறப்பு விதிகளில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் திருத்தம் செய்த உடன், இப்பணிக்கான தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.