Categories
தேசிய செய்திகள்

“தேர்வறைக்குள் அனுமதி இல்லை”…. 7 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்…. கர்நாடகாவில் பரபரப்பு….!!!!

கர்நாடகத்தில் தேர்வறைக்குள் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி வழங்கிய 7 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக உயர்நீதிமன்றம், மாநில அரசு பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியக் கூடாது என்று விதித்திருந்த தடையை உறுதி செய்துள்ளது. இதையடுத்து ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு பள்ளி, கல்லூரிகளில் அனுமதி வழங்கப்படவில்லை.

பள்ளிகளில் தற்போது பொதுத் தேர்வு நடந்து வரும் நிலையில் மாநில கல்வித்துறை ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவிகள் உடுப்பியில் தேர்வு எழுதவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தேர்வு அறைக்குள் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி வழங்கிய 7 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |