Categories
அரசியல்

தேர்வில் ஏற்படும் மன அழுத்தம்…. தப்பிப்பதற்கான வழிமுறைகள்…. சூப்பர் டிப்ஸ் இதோ….!!!!

மாணவர்கள் தேர்வில் கவனம் செலுத்துவதற்கான சில வழிமுறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்போது தான் நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற முடியும். இந்த மன அழுத்தத்தில் இருந்து தப்பிப்பதற்கான சில வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். அதாவது,

  • முதலில் கேள்விகளை நன்றாக படிக்க வேண்டும்.
  • தேர்வு எழுதும் போது நேரத்தை நன்றாக கவனித்து தேர்வு நேரம் முடிவடைவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு எழுதி முடிக்க வேண்டும். இந்த 15 நிமிடத்திற்குள் வினாத்தாளை ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.
  • போட்டித்தேர்வு எழுதுபவர்கள் மிகவும் கவனமாக எழுத  இருக்க வேண்டும். ஏனெனில் அதில் வட்ட கேள்விகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
  • தேர்வு எழுதும் போது அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்தால் போதும் என்ற மனநிலையே இருக்கும். இதனால் வாக்கியங்கள் முழுமை பெறாமல் போக வாய்ப்புகள் அதிகம். இதனால் மதிப்பெண் குறையும். எனவே தேர்வு எழுதும்போது ஒவ்வொரு வாக்கியத்தையும் முழுமையாக முடிக்க வேண்டும்.
  • தேர்வில் சுலபமான கேள்விகளுக்கு முதலில் விடையளிக்க வேண்டும். இதனால் கிடைக்கும் நேரம் மிச்சத்தை கொண்டு கடினமான கேள்விகளுக்கு யோசித்து விடை அளிக்கலாம்.
  • ஒரு கேள்விக்கு அதிக நேரத்தை செலவழிக்க கூடாது. அப்படி செய்தால் உரிய நேரத்தில் தேர்வை எழுதி முடிக்க முடியாது.
  • தேர்வில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்.
  • தேர்வு எழுதும் போது தெரிந்த கேள்விக்கு விடை மறந்து விட்டால் கவலை அடைய கூடாது. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு அடுத்தடுத்த கேள்விகளை எழுத முடியாத நிலை ஏற்படும். எனவே தெரியாத கேள்வியை விட்டிவிட்டு  அடுத்த கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். அப்படி எழுதிக் கொண்டிருக்கும் போது மறந்த கேள்விக்கான விடை நமக்கு ஞாபகம் வர வாய்ப்புகள் அதிகம்.

Categories

Tech |