Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தேர்வில் குறைவான மதிப்பெண்…. பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!!

பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலை ஆத்துக்காடு பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். மூத்த மகளான மோனிகா(16) மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் படிப்பில் கவனம் செலுத்தாத மோனிகாவுக்கு பெற்றோர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற தேர்வில் மோனிகா மதிப்பெண் குறைவாக எடுத்ததால் பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பகுதியான தொப்பையாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |