Categories
மாநில செய்திகள்

தேர்வில் தோல்வி…..மாணவ, மாணவிகள் எடுத்த….விபரீத முடிவுகள்….பெரும் சோகம்….!!!!

தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல..யாரேனும் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் இருப்பது பற்றி உங்களுக்குத் தெரிய வந்தாலோ தயவுசெய்து ‘சினேகா தற்கொலை தடுப்பு மையம்: 044-24640050 அல்லது மாநில சுகாதாரத் துறையின் உதவி எண்: 104 ஆகிய எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்த தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் சிலர், விபரீத முடிவுகளை எடுத்துள்ளனர். அவ்வாறு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வடவெட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் என்பவரின் மகள் சத்தியவதி, தேவனூரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் -2 படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் 3-பாடங்களில் தோல்வி அடைந்துள்ளார். இதனால்  மனமுடைந்த மாணவி சத்தியவதி, தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இது குறித்து தகவலறிந்த, வளத்தி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மாணவி சத்தியவதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல், செஞ்சி அருகே உள்ள பாலப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் கிஷோர் என்பவர், தேர்வில் தோல்வி அடைந்ததால் விஷம் குடித்து  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து மாணவர் கிஷோரை மீட்ட அவரது உறவினர்கள், சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தேர்வில் தோல்வி அடைந்ததால், அடுத்தடுத்து மாணவ, மாணவிகள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இவ்வாறு தேர்வில் தோல்வி அடையும் மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக கவுன்சிலிங் வழங்கி, தற்கொலை முயற்சிகளை  தடுக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளனர்.

Categories

Tech |