Categories
தேசிய செய்திகள்

தேர்வில் 26 முறை தோல்வி…. கிராமத்தில் மாலை அணிவித்து மரியாதை…. சுவாரஸ்யமான பின்னணி என்ன….?

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதில் இணையதளம் என்பது பல்வேறு விதமான பதிவுகளால் நிரம்பி வழிகிறது. இதில் பெரும்பாலான செய்திகளில் உண்மை தன்மை இருப்பதில்லை. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலம் பிபால்கோட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் உமேஷ் என்பவரின் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் 11-ஆம் வகுப்பு வரை படித்து விட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் உத்திரப் பிரதேசத்தில் சமீபத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது.

இந்த முடிவுகள் வெளியான பிறகு,‌ உமேஷ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அந்தப் பதிவில் உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்து 26 முறை தோல்வியடைந்த எனக்கு கிராம மக்கள் என்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த பதிவுடன் ஒரு மார்க்ஷீட்டின் புகைப்படத்தையும், 2 பெண்கள் மாலை அணிவிக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இதை பதிவிட்ட 24 மணி நேரத்தில் அது மிகவும் வைரல் ஆனது. ஆனால் அந்த பதிவில் உண்மை இல்லை. ஏனெனில் அவர் பதிவு செய்திருந்த புகைப்படம் மிகவும் பழையது ஆகும்.

இந்த பதிவை கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி பதிவிட்டிருந்தார். அதன்பின் கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி மீண்டும் பகிரப்பட்டு இருந்தது. இதிலுள்ள கமெண்டுகளை வைத்துதான் அதில் உள்ள உண்மைத் தன்மையை தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த பதிவை உமேஷ் மக்களை சிரிக்க வைப்பதுதற்காக மட்டுமே பதிவிட்டுள்ளார். மேலும் இந்த செய்தியிலிருந்து எந்த ஒரு தகவலையும் முழுமையாக ஆராய்ந்து பார்க்காமல் நம்ப கூடாது என்பது தெளிவாக தெரிகிறது.

Categories

Tech |