இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கனகப்பபுரம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான ஷர்மி என்ற மகள் இருந்துள்ளார். இவர் வங்கிப்பணிக்கான தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். இதற்காக ஒரு பயிற்சி வகுப்புக்கு ஷர்மி சென்று வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு ஷர்மி மாடியில் இருக்கும் அறைக்கு தூங்க சென்றுள்ளார். அதிகாலை நீண்ட நேரமாகியும் ஷர்மி அறையிலிருந்து வெளியே வராததால் குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது ஷர்மி தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.