Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தேர்வுக்கு படிக்கல” மாணவனின் விபரீத செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தேர்வு குறித்த பயத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் பகுதியில்  இருக்கும் அண்ணா தெருவில் சந்தோஷ் குமார் என்ற மாணவன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  இவருக்கு தந்தை கிடையாது. இந்த சிறுவன் தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணித தேர்விற்காக சரியாக படிக்காததால் மன உளைச்சலில் இருந்த சந்தோஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தோஷ்குமாரின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |