Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேர்வுக்கு பயந்து…. கடத்தல் நாடகமாடிய மாணவன்…. எச்சரிக்கை விடுத்த போலீஸ்….!!!!

சென்னை மாநகரில் கீழ்ப்பாக்கம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவன் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் ஆட்டோவில் ஏறுவதற்காக காத்துக் கொண்டிருந்த போது இன்னொரு ஆட்டோவில் வந்த இரண்டு பேர் மாணவனை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளனர். மேலும் ஓடும் ஆட்டோவில் மாணவனை அவர்கள் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த ஆட்டோ பச்சையப்பன் கல்லூரி சிக்னலில் நின்ற போது மாணவன் கீழே குதித்து தப்பியுள்ளார். பிறகு அவர் மெட்ரோ ரயில் ஏறி தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் மாணவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் தேர்வுக்கு பயந்த மாணவன் கடத்தல் நாடகம் ஆடியது தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் மாணவனை கண்டித்து பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |