தமிழகத்தில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் திறப்பு குறித்து பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மே மாதம் 6 தேதி முதல் மே மாதம் 30ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் மே மாதம் 2-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மே மாதம் 13ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 13 ஆம் தேதியிலிருந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. அதாவது ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே மாதம் 13ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 12ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதன் பின்2022-2023 ஆம் ஆண்டு கல்வி வரும் ஜூன் மாதம் 13ம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.