தேர்வுக்கு முதல் நாள் படிக்கும் மாணவனை போல முதல்வர் பழனிசாமி திட்டங்களை அறிவித்து வருகிறார் என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் எதிர்க் கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக அதிமுக தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். தேர்வுக்கு முந்தைய நாளில் படிக்கும் பள்ளி மாணவனைப் போல முதல்வர் பழனிசாமி திட்டங்களை அறிவிக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் மக்களை கவர்வதற்காக முதல்வர் பழனிசாமி புதிய திட்டங்களை அறிவித்து வருவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.