12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் லிங்கம் தெருவில் தையல் தொழிலாளியான ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிருந்தா(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் மாதவரத்தில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. கடந்த மூன்று மாதங்களாக பிருந்தா பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் இருந்துள்ளார். இதுகுறித்து தந்தையிடம் கேட்டதற்கு ஒரு வாரத்தில் கட்டணத்தை செலுத்தி விடலாம் என ராதாகிருஷ்ணன் கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத ஏக்கத்தில் இருந்த பிருந்தா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.