Categories
கல்வி மாநில செய்திகள்

தேர்வுக்கு ரெடி ஆகிட்டீங்களா? ”இது கட்டாயமில்லை” டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ..!!

போட்டி தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய ஆதார் கட்டாயமில்லை என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன் தேர்வர்கள் ஆதார் எண்ணை ஒரு முறை பதிவேற்றத்தில் (OTR) இணைத்தால் மட்டுமே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும். அப்போது மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்ய முடியும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

இந்நிலையில், தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய ஆதார் கட்டாயமில்லை என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.மேலும், குரூப்-1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜனவரி மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்வர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ஆதார் இணைக்க கோரிய முடிவை டிஎன்பிஎஸ்சி ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |