குரூப் 4 தேர்வு மூலமாக தமிழக அரசு துறையில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதனால் இந்த தேர்வை அதிகமானோர் எழுதி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,138 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடைபெற்றது.
தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த தேர்வர்களுக்கு, டிசம்பர் முதல் வாரத்தில் தேர்வு முடிவு வெளியாகும் என TNPSC வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், முந்தைய தேர்வுகளின் கட் ஆப் மதிப்பெண்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கட் ஆப் மார்க் குறைய வாய்ப்பிருந்தாலும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது எனவும் தெரிகிறது.