மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பட்டுதுறை கிராமத்தில் பூவரசன்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேப்பூர் பகுதியில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பூவரசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவி தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது ஆசை வார்த்தைகள் கூறி பூவரசன் மாணவியை அவரது வீட்டிற்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பூவரசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.