மாணவியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் திலீப்குமார்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவர் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 30-ஆம் தேதி அந்த மாணவி தேர்வு எழுதி முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சென்ற திலிப்குமார் மாணவியை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் திலீப்குமாரை கைது செய்தனர். மேலும் மாணவியை மீட்டு பெண்கள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.