கரூர் மாவட்டத்திலுள்ள சின்னப்புளியம்பட்டியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவேந்திரன்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் யுவந்திரன் அரையாண்டு தேர்வு எழுதிவிட்டு சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். இதனையடுத்து அரவக்குறிச்சி+சின்ன தாராபுரம் சாலையில் இருக்கும் எலவனூர் பிரிவில் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி யுவேந்திரன் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர் யுவேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.