மாணவர்களின் மிகப் பெரிய எதிரி பதற்றம். எதிர்பார்ப்புகளை குறைத்து தேர்வை சந்திப்பது இதற்கு நல்ல தீர்வு. மனத்தில் பதித்தல், அதைச் சேமித்துவைத்தல், நினைவுபடுத்திப் பார்த்தல்; இது ஒரு நல்ல உத்தி.
தூக்கம் மிகவும் முக்கியம். விடாமல் படிக்கும்போது ஒரு மணி நேரம் தூங்கிவிட்டுப் படித்தால் மூளையின் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். கிரகிக்கும் திறனும் அதிகரிக்கும்.
துரித உணவு நினைவுத் திறனைப் பாதிக்கும். இதை சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடிக் குறையும். பரோட்டா போன்ற செரிமானக் கோளாறை உண்டாக்கும் உணவை தவிர்க்கலாம்.
மனதை ஒருநிலைப்படுத்தி படிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாகப் படித்துத் திணிப்பதை விட படித்ததை ஒருங்கிணைத்து எவ்வளவு அழகாக எழுதுகிறோம் என்பது நல்ல மதிப்பெண்களுக்கு உதவும்.
இந்தத் தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்லை. மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்பது இதன் அர்த்தமல்ல. மதிப்பெண்ணை விடவும் வாழ்க்கை முக்கியம் என்பதே இதன் அர்த்தம்.