Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தேர்வு எழுதுவதற்காக சென்ற மாணவி…. கடத்தி சென்ற வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

மாணவியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் மாற்றுத்திறனாளி மாணவி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி பொதுதேர்வு எழுதுவதற்காக ஆலங்குளம் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுள்ளார். அதன்பிறகு அங்கிருந்து தேர்வு எழுதும் மையத்திற்கு மினி பேருந்தில் சொல்வதற்காக காத்துக்கொண்டிருந்தார்.இந்நிலையில் ஆலங்குளத்தை சேர்ந்த வாலிபர் தேர்வு மையத்திற்கு அழைத்து சென்று விடுவதாக மாணவியிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய மாணவி மோட்டார் சைக்கிளில் அந்த வாலிபருடன் சென்றுள்ளார்.

ஆனால் அந்த வாலிபர் தேர்வு மையத்திற்கு செல்லாமல் புதுப்பட்டி சாலை வழியாக வேகமாக சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் வழிமறித்து மாணவியை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அங்கு விரைந்து சென்று அவரை மீட்டு தேர்வு மையத்திற்கு அழைத்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |