அரியலூர் மாவட்ததில் அயன் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ரஞ்சித்குமார்(வயது 18), கார்த்திகேயன்(19). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் இருவரும் நேற்று முன்தினம் தேர்வு எழுத ஒரே பைக்கில் சென்றனர்.
தேர்வை முடித்துவிட்டு ஆத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மாணவர்களின் பைக் மீது பின்னால் வந்த லாரி மோதியது. புறவழிச்சாலையில் அரியலூர் ரெயில்வே மேம்பாலத்தில் நடந்த இந்த விபத்தில் மாணவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது கார்த்திகேயன் தலையில் லாரின் பின் சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தார். உயிர்க்கு போராடிய ரஞ்சித்குமாரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமணையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.