Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“தேர்வு எழுத மோட்டார் சைக்கிளில் சென்ற 3 மாணவர்கள்”… விபத்தால் தேர்வு எழுத முடியவில்லை…!!!!

மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு உட்பட்ட அரசூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சதீஷ், அபிஷேக். இவர்கள் இருவரும் கொருக்கை உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றார்கள். மேலும் அதே பகுதியில் வசித்து வரும் விஜய் என்ற மாணவரும்  பாராசூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றார்.

இந்நிலையில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் மூன்று மாணவர்களும் தேர்வு எழுதுவதற்காக கொருக்கை உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்று கொண்டிருந்த எழில் குமார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது. அபிஷேக் என்ற மாணவனுக்கும் மட்டும் லேசான காயம் ஏற்பட்டதால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தேர்வு எழுத சென்றான்.

ஆனால் மற்ற இரண்டு மாணவர்களும் எழில் குமாரும் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள். மாணவர்கள் இருவரும் மயக்க நிலையில் இருந்ததால் அவர்களால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதவில்லை. மேலும் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |