Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தேர்வு எழுத வந்த மாணவி….. வாலிபர் செய்த காரியம்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

தேர்வு எழுத வந்த மாணவியிடம் தங்க சங்கிலி, செல்போன் திருடிய மாணவரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நிவேதா என்பவர் கல்லூரியில் பி.எட் படித்து வருகிறார். இந்நிலையில் நிவேதா தேர்வு எழுதுவதற்காக தர்மபுரி அரசு கலைக் கல்லூரிக்கு சென்றுள்ளார். இதேபோல் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளும் தேர்வு எழுதுவதற்காக வந்துள்ளனர். அவர்கள் தங்களது உடைமைகளை அறைக்கு வெளியே வைத்து விட்டு தேர்வு எழுத சென்றுள்ளனர். இந்நிலையில் நிவேதா தனது 1 பவுன் தங்க சங்கிலி, வெள்ளி கொலுசு, செல்போன் ஆகியவற்றை அறைக்கு வெளியே தனது பையில் கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தார்.

அப்போது தனது தங்க சங்கிலி, வெள்ளி கொலுசு, செல்போன் ஆகிவை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த நிவேதா அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கல்லூரியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதே கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படிக்கும் லோகேஸ்வரன் என்பவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதனையடுத்து லோகேஸ்வரனை போலீசார் கைது செய்து அவர் திருடிய பொருட்களை மீட்டு மாணவியிடம் ஒப்படைத்தனர்.

Categories

Tech |