10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள கீழ்குப்பிரெட்டிபட்டியில் முத்துக்குமார்- பரமேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு லட்சுமி(15) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளியில் நடந்த திருப்புதல் தேர்வை லட்சுமி சரிவர எழுதவில்லை. இதனால் வீட்டிற்கு வந்த லட்சுமி தனது பெற்றோரிடம் தேர்வு சரியாக எழுதாதது குறித்து கூறி வருத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லட்சுமி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமியின் உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.