நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல முக்கிய தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் நீட், கேட் உள்ளிட்ட முக்கியத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய கல்வி நிறுவனங்களில் பொறியியல் மேற்படிப்புக்காக நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2022 பிப்ரவரி 5, 6, 13 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும். 27 பாடப்பிரிவுகளில் நடத்தப்பட்டு வந்த தேர்வில் புவிசார் பொறியியல், கடற்படை கட்டடக்கலை & கடல்சார் பொறியியல் ஆகிய இரண்டு தாள்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.