Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தேர்வை தவறவிட்ட +2 மாணவர்களுக்கு ஜூலை 27இல் தேர்வு …!!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதியில் ஆண்டு தேர்வு மார்ச் 24-ம் தேதி நடத்தப்பட்டது. வேதியியல், புவியியல் மற்றும் கணக்குப்பதிவியல் இந்த பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் 32,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அன்றைய தேர்வில் பங்கேற்கவில்லை. ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணங்களாலும், கொரோனா காரணமாகவும் மாணவர்கள் நிறைய பேர் பங்கேற்க முடியாத ஒரு சூழல் இருந்தது.

அதனால் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்ததையடுத்து இவர்களுக்கும் தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால் பல்வேறு கட்டங்களில்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு தற்போது 27 ஆம் தேதி இந்த தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 13 ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை இந்த தேர்வுக்கான புதிய நூழைவுச் சீட்டை www.dge.tn.go.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |