மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூற முதல்வர் மு.க ஸ்டாலின் தஞ்சை புறப்பட்டுள்ளார்..
தஞ்சாவூர் களிமேட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்த நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிகழ்வுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உட்பட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.. இதற்கிடையே உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூற முதல்வர் முக ஸ்டாலின் தஞ்சை புறப்பட்டுள்ளார்.. சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து காரில் தஞ்சை செல்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். மேலும் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவர்களை சந்தித்து நலம் விசாரிக்கவும் உள்ளார் முதல்வர் ஸ்டாலின்..