Categories
ஆன்மிகம் கிறிஸ்த்து

தேவனுடைய பாதுகாப்பை… உறுத்திப்படுத்தும் சங்கீதம் 91…!!!

உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்.

நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருகிறவர் என்று சொல்லுவேன்.

அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்.

அவர் தமது சிறகுக்குகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டையின் கீழே அடைக்கலம் புகுவாய், அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.

இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்.

இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்கத்துக்கும் பயப்படாதிருப்பாய் .

உன் பக்கத்தில் ஆயிரம் பேரும் உன் வலதுபுறத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும் அது உன்னை அணுகாது.

உன் கண்களால் மாத்திரம் நீ அதைப்  பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.

எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாக கொண்டாய்.

ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.

Categories

Tech |