ஹாங்காங்க் விவகாரம் தொடர்பாக தலையிட்ட 5 நாடுகளின் கண்களை பிடுங்கி விடுவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்துவரும் ஹாங்காங் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் எதுவும் தலையிட்டால் அவர்களின் கண்களை நோண்டி விடுவோம் என்று சீனா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகள் அடங்கிய கூட்டணி 5 கூட்டணி என்று அழைக்கப்படுவைத்து வழக்கம. இந்நிலையில் இந்த 5 கண் கூட்டணி, சீனா ஹாங்காங்கில் உலா அதிருப்தியாளர்கள் வாயை மூடுகிறது என்று விமர்சித்துள்ளது. ஏனெனில் தற்போது ஹாங்காங்கில் சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கம் செய்யும் புதிய விதியை சீனா அமல்படுத்தியுள்ளது.
இதனால் இந்த ஐந்து நாடுகளின் கூட்டணி அதற்கு கடுமையாக விமர்சித்ததுடன் இந்த நடவடிக்கை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவ் லீஜான் கூறுகையில், “இந்த 5 நாடுகளின் கூட்டணிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இல்லை என்றால் அவர்கள் கண்களைப் பிடுங்கி எடுத்து விடுவோம். சீனா எப்போதும் யாருக்கும் தொல்லை கொடுப்பதில்லை. மேலும் எதைப் பார்த்ததும் நாங்கள் அஞ்சப்போவதில்லை. அவர்களுக்கு ஐந்து கண் இருக்கிறதா இல்லை பத்து கண்கள் இருக்கிறதா என்பது எங்களுக்கு பிரச்சினையே கிடையாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் பதவி நீக்கம் செய்யப்பட்ட நால்வரையும் மீண்டும் பதவி அமர்த்தும்படி அந்த ஐந்து நாடுகள் கூட்டணி நாடுகளளின் அமைச்சர்கள் சீனாவை வலியுறுத்தியுள்ளன.
இந்த பதவி நீக்கதினால் ஹாங்காங்கில் சுதந்திரங்கள், முழு தன்னாட்சி ஆகிவற்றின் பாதுகாப்பு தொடர்பான கடமைகளை சீனா மீறி உள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இதன் மூலம் தங்களுடைய பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கு தங்களின் உரிமையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.