Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் மகன்…. 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலை கண்டெடுப்பு…. வெளியான தகவல்….!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாங்குடி கிராமத்தில் வசிக்கும் பூசாரி சிங்கராஜா என்பவர் பழங்கால சிற்பங்கள் இருப்பதாக தெரிவித்த தகவலின் படி பாண்டியநாடு பண்பாடு மையத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் ஆகியோர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் மகன் கசன் என்பவரின் சிலையை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, மகாபாரதம், அக்னி, மச்ச புராணங்களில் அடிப்படையில் தேவர்களின் குரு பிரகஸ்பதி ஆவார். இவர் அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரிடமிருந்து இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தை கற்று வா என கூறி தனது மகனான கசன் என்பவரை அனுப்பி வைத்தார்.

மாங்குடி கிராமத்தில் கசன் சிலை கிடைத்திருப்பது மிகவும் வியப்பான ஒன்று. தலையின்றி காணப்படும் இந்த சிலை 3 அடி உயரமும், 1 1/2 அடி அகலமும் உடைய பட்டையான கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இரண்டு கரங்களில் வலது கரத்தில் தாமரை மலரையும், இடது கருத்தை தொடை மீது வைத்தபடியும், கை கால்களில் வளையல்களும், அணிகலன்களும் அணிந்தவாறு சிலை செதுக்கப்பட்டுள்ளது. அந்த சிற்பத்தின் அருகே உடைந்த நிலையில் கோமூகி, 2 சேதமடைந்த தலை பாகங்களும், சிதைந்த நிலையில் ஒரு ஐந்து தலை நாக சிற்பமும் இருக்கிறது. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என அவர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |