முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அவரது பிறந்தநாளையொட்டி தேவர் ஜெயந்தி குரு பூஜை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மதுரை கோரிப்பாளையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் மற்ற அமைச்சர்களும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மற்றும் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு ,மலர் தூவி மரியாதை செய்தனர்.