Categories
மாநில செய்திகள்

“தேவர் ஜெயந்தி விழா” வசமாக மாட்டிக் கொண்ட ஓபிஎஸ்….. கழக்கத்தில் ஆதரவாளர்கள்…..!!!!

தேசப்பற்றும், ஆன்மீக பற்றும் உடைய முத்துராமலிங்கத் தேவர் கடந்த 1908-ம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி உக்கிரபாண்டிய தேவர் மற்றும் இந்துராணி அம்பாளுக்கு மகனாக பிறந்தார். இவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மீது அளவு கடந்த அன்பும், மரியாதையும் வைத்திருந்தார். இதன் காரணமாக முத்துராமலிங்க தேவர் சுபாஷ் சந்திர போஸ் உடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்திற்காக பாடுபட்டார். இப்படி சுதந்திரப் போராட்டத்திற்காக பாடுபட்ட முத்துராமலிங்க தேவர் கடந்த 1963-ம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி மறைந்தார். இந்நிலையில் முக்குலத்து மக்களின் கடவுளாக கருதப்படும் முத்துராமலிங்க தேவருக்கு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் பகுதியில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவிடத்தில் முத்துராமலிங்க தேவர் பிறந்து மறைந்த அக்டோபர் 30-ஆம் தேதி அன்று ஆண்டுதோறும் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை பிரமாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவின் போது தங்கத்தால் ஆன கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசத்தின் மொத்த மதிப்பு 14 கிலோ ஆகும். இதன் காரணமாக முக்குலத்தோர் மனதில் அம்மா ஜெயலலிதா நிலையான ஒரு இடத்தை பிடித்தார். அதன் பிறகு வருடம்  தோறும் நடக்கும் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவின் போது ஓபிஎஸ் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு தங்க கவசத்தை அணிவித்து மரியாதை செலுத்துவார்.

இந்த கவசம் மதுரையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையின் லாக்கரில் வைக்கப் பட்டுள்ளது. இந்த லாக்கரின் சாவி அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவிடம் பொறுப்பாளர்களிடம் இருக்கும். இந்நிலையில் அதிமுக கட்சியில் நிலவும் பிரச்சனை காரணமாக ஓபிஎஸ் இன் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டு திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இதனால் வருகிற அக்டோபர் 30-ஆம் தேதி வரவிருக்கும் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவுக்கு ஓபிஎஸ் கையால் தங்க கவசம் அணிவிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதோடு தேவர் ஜெயந்தி விழா வருவதற்கு முன்பு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் எப்படியாவது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் முழு  வீச்சோடு செயல்பட்டு வருகிறார்கள். மேலும் வருகிற அக்டோபர் 30-ஆம் தேதிக்குள் அதிமுக கட்சி ஓபிஎஸ் வசம்  வந்தால் மட்டுமே முக்குலத்தோர் முன்பு கெத்தாக செல்ல முடியும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் கூறிவருகிறாராம்.

Categories

Tech |