இந்தோனேசியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈஸ்டர் பண்டிகையின் முதல் நாளான இன்று பல தேவாலயத்தில் வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தோனேஷியாவில் மக்காசர் நகரத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதளுக்காக உள்ளே சென்றுள்ளார். அனைவரும் தேவாலயத்தின் உள்ளே இருந்துள்ளனர். பக்தர்களுக்கு நடுவில் செல்ல முயன்றபோது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர்.
அப்போது வெடிகுண்டை அங்கேயே வெடிக்க வைத்துள்ளார் .யாருக்கும் எந்த ஆபத்து இல்லை என்றும் 10 க்கும் குறைவானவர்கள் காயங்களுடன் தப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த தாக்குதல்தாரி எந்த அமைப்பை சேர்ந்தவர் என்பது பற்றி தெரியவில்லை என்று கூறப்படுகிறது. போலீஸ் அதிகாரிகள்,அந்த தாக்குதல்தாரி ஐ.எஸ் ஆதரவு ஜமாஹ் அன்ஷாருத் தஉல்லாஹ் என்ற அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர் .ஏனென்றால் இந்தோனேஷியாவில் இஸ்லாமியர்கள் அதிகமாக இருப்பதால் கிறிஸ்தவர்கள் மற்ற மதத்தினர் சிறுபான்மையாக கருதப்படுகின்றனர்.
இதேபோன்று கடந்த 2018 இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியதில் 30 பேர் கொல்லப்பட்டனர்.