Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தேவாலயங்களில் சீரமைப்பு பணி…. நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்…..கலெக்டர் அறிவிப்பு….!!!!

கிறிஸ்தவ ஆலயங்களை சீரமைப்பதற்கான நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி கிறிஸ்தவ ஆலயங்களை பராமரிப்பதற்கான நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு கிறிஸ்தவ ஆலயங்களில் வயது, பழுதுகள் மற்றும் பராமரிப்புகள் போன்றவற்றைப் பொறுத்து நிதியுதவி வழங்கப்படும். இதனையடுத்து ஒரு கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டு 10 முதல் 15 வருடங்கள் இருப்பின் 1 லட்ச ரூபாய் நிதி உதவியும், 15 முதல் 20 ஆண்டுகளுக்கு 2 லட்சம் ரூபாய் நிதி உதவியும், 20 ஆண்டுகளுக்கு 3 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.

இந்த நிதி உதவியை பெறுவதற்கு 10 வருடங்களுக்கும் மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருக்க வேண்டும். அந்த தேவாலயத்தை கட்டுவதற்கு வெளிநாட்டிலிருந்து எந்த ஒரு உதவி தொகையையும் பெற்றிருக்கக் கூடாது. அதன் பிறகு பதிவு துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். ஒருமுறை சீரமைப்பு பணிக்காக நிதி உதவி வழங்கப்பட்டிருப்பின் அடுத்து 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நிதி உதவி வழங்கப்படும்.

மேலும் நிதி உதவி பெற விரும்புபவர்கள் [email protected] என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து நிதியுதவி வழங்கும்.

Categories

Tech |