Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேவாலயத்தில் கொடூரம்….. 3 சிறுமிகளிடம் அத்துமீறிய பாதிரியார்….. பெரும் அதிர்ச்சி….!!!

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியிலுள்ள புனித அருளானந்தர் தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர் ஜான்ராபர்ட்(46). கடந்த ஞாயிற்று கிழமை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பிரார்த்தனை நிறைவடைந்து, அனைவரும் தேவாலயத்தைவிட்டு புறப்பட்ட நிலையில், மூன்று சிறுமிகளை மட்டும் ஜான்ராபர்ட் தனியாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் சிறுமிகளிடம், பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான ஆபாசவார்த்தைகளால் பேசிக்கொண்டே பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவரிடமிருந்து தப்பி வந்த மூன்று சிறுமிகளும் தங்களின் பெற்றோர்களிடம் நடந்த விவரத்தைக் கூறி அழுதுள்ளனர். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர், உடனடியாக ராமநாதபுரம் குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். அதன்பேரில் குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ், சிறுமிகள் மூன்று பேரிடமும் தனித் தனியாக விசாரணை நடத்தினார். இதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

Categories

Tech |