இளைஞர் கொலை செய்யப்பட்டு அவரது தலை தேவாலயத்தின் வாசலில் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் இருக்கும் கீழவெளி வீதியில் செயின்ட் மேரிஸ் தேவாலயம் அமைந்துள்ளது. நேற்று மாலை அப்பகுதியில் இளைஞர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்த 6 பேர் அரிவாளால் சரமாரியாக இளைஞரை வெட்டிக்கொலைச் செய்ததோடு, அவரது தலையை துண்டித்து தனியாக எடுத்து அங்கிருந்த தேவாலயத்தின் வாசலில் வைத்தனர். பின்னர் சடலத்தை தேவாலயத்தின் சுற்றுச்சுவர் அருகே வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்த அவர்கள் இளைஞரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தது ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கொடூரமான சம்பவத்தை நிகழ்த்திய குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.