Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேவாலா கைதகொல்லி பகுதியில்…. வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானை…. வனத்துறையினர் நடவடிக்கை….!!!!

தேவாலா கைதகொல்லி பகுதியில் காட்டு யானை ஊருக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா தேவாலா கைதகொல்லி பகுதியில் கடந்த 5-ஆம் தேதி இரவு காட்டு யானை ஊருக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள். மேலும் ரமேஷ், கதிர்வேல் ஆகிய தொழிலாளர்களின் வீடுகளை சேதப்படுத்தி சூறையாடியது. அதோடு மட்டுமில்லாது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை எடுத்து தின்றுள்ளது. அதன்பின் துணி துவைக்கும் எந்திரம் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை உடைத்து சேதப்படுத்தியது.

அப்போது அந்த சத்தத்தை கேட்டு தொழிலாளர்கள் வளர்த்து வந்த வளர்ப்பு நாய் காட்டு யானையை பார்த்து குறைத்துள்ளது. இதனால் கோபமடைந்த காட்டுயானை வளர்ப்பு நாயை சம்பவ இடத்திலேயே தாக்கிக் கொன்று உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் குடும்பத்தினர் தங்களுடைய வீடுகளில் பதுங்கி இருந்தார்கள். இதற்கிடையே இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் தொழிலாளர்கள் குடும்பத்தினர் உயிர் பிழைத்தார்கள்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது, பலாப்பழ சீசன் நிலவுவதால் வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் ஊருக்குள் வருகின்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தார்கள். எனவே காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகள் வருவதை தடுப்பதற்கு வனப்பகுதியில் பலா உள்ளிட்ட காட்டு யானைகள் விரும்பி உண்ணக்கூடிய மரங்களை நடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் காட்டு யானைகள் ஊருக்குள் தொடர்ந்து வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, தற்சமயம் பலாப்பழ சீசன் என்பதால் காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் நுழைந்து வருகின்றது. எனவே பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மாலை அல்லது இரவு நேரம் பொதுமக்கள் தனியாக செல்லாதீர்கள். வீட்டின் அருகே விளைந்துள்ள பலாக்களை உடனுக்குடன் பறித்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கி உள்ளார்கள்.

Categories

Tech |