முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கிண்டலாக கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், “பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி நன்றாக இருக்கும் குடும்பங்களைக் எடுப்பதுதான் கமல்ஹாசன் வேலை. கமல் நடித்த படங்களை மக்கள் பார்த்தால் அவ்வளவு தான். நடித்து ஓய்வு பெற்ற பிறகு கமல் அரசியலுக்கு வந்துள்ளார். 70 வயதான அவருக்கு என்ன தெரியும்” என்று முதல்வர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் கமலை பிக்பாஸ் நிகழ்ச்சியை வைத்து முதல்வர் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதற்கு கமல் ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “முதல்வர் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என கிண்டலாக பதிவிட்டுள்ளார். மேலும் தனது பிரசாரங்களில் எம்ஜிஆரை ஒப்பிட்டுக் கொள்ளும் கமல் எம்ஜிஆரின் பாடல் வரிகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில்,
“சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்
ஒரு மானமில்லை, அதில் ஈனம் இல்லை
அவர் எப்போதும் வால் பிடிப்பார்
எதிர் காலம் வரும் என் கடமை வரும்.
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன் என இந்த பாடல்வரிகளை கமல் பதிப்பித்துள்ளார்.