Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேவைப்படுத உபகரணத்த தாங்க…. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் நகராட்சியை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் போடியில் நகராட்சியை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் சார்பாக நகராட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் நடைபெற்றது. இதனை சி.ஐ.டி.யு போடி மாவட்டத்தின் செயலாளரான ஜெயபாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். அந்தப் போராட்டத்தில் அவர்கள் ஓய்வூதியம் வழங்கும், வேலை செய்வதற்கு தேவைப்படுகின்ற அடிப்படையான உபகரணங்களையும் வழங்குவதற்காகவும் கோஷமிட்டனர். அதன்பின் நகராட்சியினுடைய கமிஷ்னரான ஷகிலாவிடம் தங்களுடைய கோரிக்கை மனுவை கொடுத்தனர். இதனை அடுத்து அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறியுள்ளனர்.

Categories

Tech |