தேவைப்பட்டால் மட்டுமே முக கவசத்தை பயன்படுத்துவேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாட்டில் கொரோனா பாதிப்பானது 40 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்து 45 ஆயிரத்தை மிஞ்சியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்வதாக கூறுகின்றார். இதுக் குறித்து வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது டிரம்ப் கூறியதாவது, “நான் தொடர்ந்து கொரோனா பரிச்சோதனை செய்து கொள்கிறேன், 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை கட்டாயம் பரிசோதனைக்கு எ ன்னை ஆட்படுத்திக் கொள்கிறேன்” என கூறியுள்ளார் . மேலும் முகக்கவசம் அணிவது பற்றி பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு டிரம்ப் பதில் கூறினார்.
அதில் “நான் எப்போதும் முககவசத்தினை வைத்திருப்பேன், ஏதாவது ஒரு சூழ்நிலையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க இயலாத நிலை ஏற்படும் போது மட்டும் முககவசம் பயன்படுத்துவேன். அவ்வாறே மக்களும் தேவைப்படும்போது மட்டும் முகத்தினை பயன்படுத்துமாறு அறிவுறுத்துவேன் . அதே சமயத்தில் அமெரிக்காவில் கொரோனா தாக்கம் குறைவதற்கு முன் அது மிகவும் மோசமான நிலையை அடையும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு ஊசிகள் மற்றும் சிகிச்சைகள் மூலமாக இழப்பு மற்றும் பாதிப்பு விகிதம் குறையும் என நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார்.