மகாராஷ்டிராவை அடுத்து மத்திய பிரதேசத்திலும் அதிகரித்து வருவதால் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மட்டுமில்லாமல் கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் கடந்த சில தினங்களாக பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவால் சிகிச்சை பெறுபவர்களின் 74% அதிகமானோர் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில். பாதிப்பு மிக அதிகமாக உள்ளதால் அவற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு செயல்படுத்தப்பட்டது இதனை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலைமை தொடர்ந்து அதிகரித்து வந்தால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எச்சரித்துள்ளார்.
மேலும் மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்து வருவதால் வேலைவாய்ப்பிற்காக செல்பவர்கள் அந்த மாதத்திற்கு மாநிலத்திற்கு செல்ல வேண்டாம் என்றும், பொதுமக்கள் தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.